நிரந்தரத் தீர்வை எட்ட துடிக்கும் ட்ரம்ப்: பாகிஸ்தானுக்கு விரைந்துள்ள முக்கிய பிரதிநிதிகள்
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பாகிஸ்தான் செல்லவுள்ளனர்.
இது குறித்த அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் இது குறித்துச் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
நிரந்தரத் தீர்வு
அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரான் தொடர்பான முக்கிய விவாதங்களை நடத்துவதற்காக இந்த உயர்மட்டக் குழு பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சூழலில் இரு தரப்புக்கும் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைக்க இந்தச் சந்திப்பு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ட்ரம்பின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகள் இந்தப் பயணத்தில் இணைந்திருப்பது ஈரான் விவகாரத்தில் ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட அமெரிக்கா கொண்டுள்ள ஆர்வத்தைக் காட்டுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்