வீடு சென்ற வழியில் விசேட அதிரடிப்படை அதிகாரிக்கு நேர்ந்த கதி
கொழும்பு - நிட்டம்புவவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் விசேட அதிரடிப்படை காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிட்டம்புவ முதலீட்டு வலய வீதியில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிகாரி, தொலைபேசி கம்பம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அதனை தொடர்ந்து, இன்று காலை ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் நிட்டம்புவ காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அதன்படி, அதிகாரிகள் குழு காயமடைந்த நபரை வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
மேற்படி, உயிரிழந்தவர் நிட்டம்புவ, ருக்காஹவில பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய விசேட அதிரடிப்படை காவல்துறை உத்தியோகத்திர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
