சீன மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
food
people
china
By Shalini
சீனாவில், அன்றாடத் தேவைக்கான அத்தியாவசிய பொருள்கள் சிலவற்றைச் சேகரித்து வைத்துக் கொள்ளுமாறு அந்நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
குளிர்காலத்தில் பொருள்களின் விலையும், அவற்றின் விநியோகமும் சீராக இருப்பதை உறுதி செய்யுமாறு உள்ளாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சீனாவில் பெய்த கனத்த மழையால் பயிர்கள் சேதமடைந்தன. இந்த நிலையில், புதிதாகக் கிருமிப்பரவல் ஏற்பட்டுள்ளதால், உணவு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற கவலையும் எழுந்துள்ளது.
அதிகாரிகளின் இந்த உத்தரவால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.