அரசாங்கத்தின் அரசியல் நாடகம்: அம்பலப்படுத்தும் எம்.பி
அரசாங்கம் தங்களுக்கு நட்பான சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி, கொழும்பு மாநகர சபையில் திசைகாட்டி அதிகாரத்தைக் கைப்பற்றியதாகக் கூறி போலி ஊடக நாடகத்தை நடத்தி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்த ஊடக நாடகம் அரசாங்கம் எவ்வளவு பயப்படுகிறது என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் பெயர்கள் கூட வர்த்தமானியில் வெளியிடப்படாத நிலையில், அரசாங்கம் எவ்வாறு அதிகாரத்தை நிறுவியுள்ளது என்று கூற முடியும் என்று கேள்வி எழுப்பிய ரஹ்மான், அங்கு யாருக்கு அதிகாரம் இருக்கும் என்பது வரும் 2 ஆம் திகதி நடத்தப்படும் தேர்தலில் தீர்மானிக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் அதிகாரம்
கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவதில் ஜனாதிபதியின் தலையீடு அவர்கள் எவ்வளவு பயப்படுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
அத்தோடு, கொழும்பில் அதிகாரத்தை நிறுவும் நோக்கில் சுயேட்சைக் குழுவின் பல உறுப்பினர்களும் எதிர்க்கட்சியுடன் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
