இலங்கையில் வெற்றியடைந்துள்ள பயிர்ச்செய்கை : விவசாய அமைச்சு மகிழ்ச்சி தகவல்
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் நுவரெலியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஏற்றுமதி சார்ந்த ஸ்ட்ராபெரி பயிர்ச்செய்கை இதுவரை வெற்றியடைந்துள்ளதாக கமத் தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஸ்ட்ராபெரி மாதிரித் தோட்டம், அரசின் தலையீட்டில் செயல்படுத்தப்படும் முதல் ஸ்ட்ராபெரி சாகுபடி மாதிரித் திட்டமாகும்.
பயிர்ச்செய்கை
நுவரெலியாவின் பிளாக்பூல் பகுதியில் 52 விவசாயிகளின் பங்களிப்புடன் 40 பசுமை இல்லங்களில் இந்த பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர(mahinda amaraweera) பயிர்ச்செய்கையை பார்வையிட்டார்.
ஸ்ட்ராபெரி செடிகள்
இந்த விவசாயிகளுக்கு எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்ட்ராபெரி செடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதுடன், விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் இந்த பயிர்ச்செய்கைக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |