ஒருதலைப்பட்சமாக செயற்பட வேண்டாம்! ரில்வின் சில்வாவுக்கு பதிலடி கொடுத்த மனோ கணேசன்

Anura Kumara Dissanayaka Mano Ganeshan Sri Lanka National People's Power - NPP Tilvin silva
By Harrish Dec 03, 2024 07:21 AM GMT
Report

மாகாண சபையை அகற்றியே தீருவோம் என்று ஒருதலைப்பட்சமாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறுவது ஏற்புடையதல்ல என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்(mano ganesan) தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "மாகாணசபை என்பது வேறு. சம உரிமை என்பது வேறு என்பதை ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிந்துகொள்ள வேண்டும்.

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

மாகாண சபை முறைமை

மாகாண சபை என்பதை நாம் ஏற்கமாட்டோம். ஆனால், இன்றைய மாகாண சபை முறைமை என்பது தமிழ் மக்களின் போராட்டங்களால் கிடைக்கப் பெற்றது. ஆகவே, அதை நாம் எதிர்க்கவும் போவதில்லை” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கடந்த தேர்தல்களுக்கு முன் என்னிடம் நேரடியாகக் கூறியுள்ளார். 

இன்றும் பல தமிழ்த் தலைவர்களிடமும் அவர் இந்தக் கருத்தைக் கூறி இருப்பதை நான் அறிவேன்.

ஒருதலைப்பட்சமாக செயற்பட வேண்டாம்! ரில்வின் சில்வாவுக்கு பதிலடி கொடுத்த மனோ கணேசன் | Tilvin Silva Statement Is Wrong Mano Ganesan

இப்போது “மாகாண சபையை அகற்றி விட்டு அதற்குப் பதில் நாடு தழுவிய, சம உரிமையைத் தருவோம்” என தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் கூறுகின்றார்கள். சம உரிமை வருவது நல்லதே. ஆனால், சம உரிமை என்பது வேறு. அதிகாரப் பகிர்வு என்பது வேறு.

மாகாண சபையை அகற்றுவது பற்றி தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூறப்பட்டதாகத் தெரியவில்லை. 

புலம்பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு

புலம்பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு

சம உரிமை

ஒருவேளை வடக்கு மாகாண மாவட்டங்களில் தமிழ் மக்களின் வாக்குகள் பெரும்பான்மையாகக் கிடைத்துள்ளமையால், “மாகாண சபை என்பதை நாம் ஏற்க மாட்டோம்” என்ற பழைய ஜே.வி.பியின் கொள்கை நிலைப்பாட்டைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு அதை அகற்ற ஆணை தந்துள்ளார்கள் எனத் தேசிய மக்கள் சக்தி நினைக்கின்றதோ எனத் தெரியவில்லை.

சம உரிமை வருவது நல்லதே. ஆனால், சுலபமான காரியம் அல்ல. இன, மத, மொழி ரீதியாக சம உரிமைகள் இந்த நாட்டில் உறுதிப்படுத்த இன்னமும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். 

இங்கே இன்று அரசமைப்பிலேயே, இந்த நாட்டின் மொழிகள். மதங்கள் மத்தியில் சம உரிமை உறுதிப்படுத்தப்படவில்லை. அரச மதமான பௌத்த மதத்துடன் பௌத்த தேரர்கள், இந்த நாட்டின் அதிகார மையத்தில் இருக்கின்றார்கள்.

ஒருதலைப்பட்சமாக செயற்பட வேண்டாம்! ரில்வின் சில்வாவுக்கு பதிலடி கொடுத்த மனோ கணேசன் | Tilvin Silva Statement Is Wrong Mano Ganesan

மொழி தொடர்பில் சில பலவீனமான சட்டங்கள் ஆங்காங்கே இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்த இந்த நாட்டின் அரச அதிகார வர்க்கம் இடம் கொடுப்பதில்லை. மொழிகள் மத்தியில் சம உரிமையை அமுல் செய்யப் படாதபாடு பட்ட எனக்கு இது நன்கு தெரியும்.

சம உரிமை என்பது வானத்தில் பறக்கும் அழகான பறவை. மாகாண சபை என்பது கையில் இருக்கும் பறவை. வானத்தில் பறக்கும் அழகான பறவையை பற்றி கனவு கண்டு கொண்டு கையில் இருக்கும் பறவையை விட்டு விடச் சொல்கின்றனவா ஜே.வி.பியும், தேசிய மக்கள் சக்தியும் எனக் கேட்க விரும்புகின்றேன்.

யாழில் கிராம உத்தியோகத்தர் - பொதுமக்கள் முரண்பாடு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் கிராம உத்தியோகத்தர் - பொதுமக்கள் முரண்பாடு - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புதிய அரசமைப்பு 

சிங்கப்பூர் சிறிய நிலப்பரப்பு கொண்ட ஒரு நாடு. ஆகவே, அங்கே மாகாணங்களை அமைத்து அதிகாரப் பகிர்வு செய்ய முடியாது.

இருப்பினும், அங்கேயும், ஜனாதிபதிப் பதவி என வரும்போது, சீனர், தமிழர், மலாய் என மூன்று இனத்தவர்களும் மாறி மாறி பதவி வகிக்கும் முறையில் அரசியல் சட்டம் இருக்கின்றது. அவர்களது அமைச்சரவையில் அனைத்து சிங்கப்பூர் இனத்தவரும் இடம்பெறுகின்றார்கள்.

நல்லாட்சியின் போது, புதிய அரசமைப்பு உருவாக்கும் முயற்சி நடந்தது. அதற்கான வழிகாட்டல் குழுவில் இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கத்துவம் பெற்று பணியாற்றினார். நானும் வழிகாட்டல் குழுவில் இடம்பெற்றேன்.

ஒருதலைப்பட்சமாக செயற்பட வேண்டாம்! ரில்வின் சில்வாவுக்கு பதிலடி கொடுத்த மனோ கணேசன் | Tilvin Silva Statement Is Wrong Mano Ganesan

இன்னமும் பல இன, மத, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வழிகாட்டல் குழுவில் அங்கத்துவம் வகித்தார்கள்.

ஆகவே, அத்தகைய புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் போது, இவை பற்றி சிநேகபூர்வகமாகக் கலந்து உரையாடி, வாத, விவாதம் செய்து, தீர்மானங்களுக்கு வரலாம்.

எனவே, இப்போதே அவசரப்பட்டு, “மாகாண சபையை அகற்றியே தீருவோம். அது ஜே.வி.பியின் கொள்கை. அது மாறவில்லை.ஜே.வி.பியும், தேசிய மக்கள் சக்தியும் ஒன்றுதான்” என ஒருதலைப்பட்சமாக ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் நண்பர் ரில்வின் சில்வா கூறுவது ஏற்புடையதல்ல."என அவர் கூறியுள்ளார்.

மின்சாரக் கட்டணம் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

மின்சாரக் கட்டணம் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

நாடாளுமன்ற உறுப்பினராக நளீம் சத்தியப்பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக நளீம் சத்தியப்பிரமாணம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024