மோடியின் இலங்கை வருகை : தெரு நாய்களுக்கு ஏற்பட்ட நிலை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) வருகையினால் அநுராதபுரம் (Anuradhapura) நகர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற அநுராதபுரம் ஆளுநர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
விலங்கு மக்கள் தொகை முகாமைக்கான கால்நடை மருத்துவர்கள் சங்கத்தில் நேற்று (27.03.2025) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயம்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஜெய ஸ்ரீ மகா போதிக்கு மரியாதை செலுத்தவும், இலங்கை தொடருந்து துறையின் கீழ் இந்திய அரசு நிதியுதவி செய்யும் திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்கவும் அவர் அநுராதபுரம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக அநுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள தெரு நாய்களை அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அநுராதபுரத்தில் நகராட்சி மன்றத்தின் ஆதரவுடன் ஐந்து வருட செயல்பாட்டுத் திட்டம் தற்போது நடைபெற்று வருவதாகவும், 90 சதவீதத்திற்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
