வெளிநாட்டு சுற்றுலா பயணி துன்புறுத்தல் : தெருவோர உணவு வியாபாரி அதிரடி கைது
வெளிநாட்டு வாடிக்கையாளரிடம் கொத்து ரொட்டிக்கு அதிக தொகையை வசூலிக்க முயன்ற தெருவோர உணவு விற்பனையாளர், அவரை வாய்மொழியாக துன்புறுத்தியதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சுற்றுலா பயணி தெருவோர உணவு கடை ஒன்றுக்கு சென்று கொத்து ரொட்டியின் விலையை விசாரித்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி
இதன்போது கொத்து ரொட்டியின் விலை 1900 ரூபா என கடைக்காரர் தெரிவித்த நிலையில் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணியை விரும்பினால் வாங்குங்கள் இல்லை என்றால் சென்று விடுங்கள் என வார்த்தையால் துன்புறுத்தியுள்ளார் உணவக உரிமையாளர்.
சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள்
இந்தச் சம்பவத்தை காணொளியாக பதிவாக்கிய குறித்த சுற்றுலா பயணி, அதனை சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பிய நிலையில், சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் அதிகப்படியான கட்டணம் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து கவனத்தை ஈர்த்தது.
இதனை அடுத்து அந்த தெருவோர உணவு கடை உரிமையாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |