இலங்கை - தாய்லாந்து இடையிலான இருதரப்பு உறவை பலப்படுத்த ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான நான்காவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2018 பெப்ரவரி 28ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றிருந்ததோடு, ஐந்தாவது சுற்று இம்மாதம்(ஒகஸ்ட்) நடைபெறவுள்ளது.
அவ்வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஐந்தாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2023 ஒகஸ்ட் 28ஆம் திகதி கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது.
இந்த ஆலோசனையில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் தாய்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான நிரந்தர செயலாளர் சருண் சரோன்சுவான் ஆகியோர் ஈடுபடவுள்ளனர்.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை
அரசியல், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் சுற்றுலா உட்பட பரஸ்பரம் உறவுகள் மற்றும் தற்போதைய ஒத்துழைப்பை உள்ளடக்கிய இருதரப்பு உறவுகளின் நிலை ஆகியன இந்த ஆலோசனைகளின் போது மதிப்பாய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் இலங்கை- தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த கடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.