காவலில் உள்ள சந்தேக நபர்கள் தாக்கப்பட்டால், பொறுப்பதிகாரி மீது கடும் நடவடிக்கை
பல்வேறு குற்றங்கள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காவல் நிலையத்திற்குள் தாக்கப்பட்டால், பொறுப்பதிகாரி அல்லது தலைமையக காவல்துறை அதிகாரி பொறுப்பேற்க வேண்டும் என்று காவல்துறைமா அதிபர் (IGP) தெரிவித்துள்ளார்.
பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சிறப்பு அறிவுறுத்தல்களின் பேரில் காவல்துறை மா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொறுத்துக்கொள்ளப் போவதில்லை
காவல்துறை காவலில் உள்ள சந்தேக நபர்கள் மீதான தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் உட்பட எதையும் தாம் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என்றும், அத்தகைய செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீது, அவர்களின் பதவி வேறுபாடின்றி, சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஹோமாகம காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டுதடுத்து வைக்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் மரணத்தை அடுத்து மேற்கண்ட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |