சட்டத்தை கண்டிப்பாக அமுல்படுத்துங்கள்! எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை
குற்றவாளிகளுக்கு எதிராக சட்டம் கண்டிப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும் ஆனால் சட்டத்திற்கு புறம்பாக அரசாங்கம் நடத்திய சட்டவிரோத கொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிரிக்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கம் சர்வாதிகாரமாகவும் ஒரு தலைபட்சமாகவும் நகர்கிறது என்றும் அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்நகரும் என்றும் அவர் கூறினார்.
அது மட்டுமல்லாமல், பொலிஸ்துறையினர் ஒரு சந்தேக நபரைக் கொல்லும்போது, அந்த அரசு சட்டவிரோதமாக ஆட்சி செய்யும் ஒரு பாசிஷ அரசாக மாறுகிறது, மேலும் இதுபோன்ற கொலைகள் மூலம், அரசியல்வாதிகள் மற்றும் சந்தேக நபரைக் கையாளும் உயர்மட்ட மோசடி செய்பவர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியுமான வாய்ப்புகள் உருவாகிறது.
இது சட்டத்தின் ஆட்சியைக் குறைத்து, சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை இல்லாமலாக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்