தொடரும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு: நெருக்கடிக்குள்ளான 2 இலட்சம் மாணவர்கள்
நாட்டிலுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து ஆரம்பித்துள்ள தொடர் பணிப்புறக்கணிப்பு இன்றும் (07) தொடரவுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் சீர்குலைந்துள்ளன.
இதனால் இலங்கை பல்கலைக்கழகத்தில் உள்ளக மற்றும் வெளிவாரியாக கல்வி கற்கும் சுமார் இரண்டு இலட்சம் மாணவர்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவையில் சமர்ப்பித்த முன்மொழிவு
அத்துடன் கற்றல் செய்றபாடுகளும் பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
சிறிலங்கா கல்வி அமைச்சர் அமைச்சரவையில் முன்மொழிவுகளை சமர்ப்பித்ததன் பின்னர், பரிந்துரைகளை வழங்குவதற்கு அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (University Grants Commission) உப தலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த (Chandana Udawatta) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |