இன்றும் பணிப்புறக்கணிப்பு : நிர்க்கதிக்குள்ளாகிய நோயாளிகள்
Sri Lanka
Strike Sri Lanka
National Health Service
By Sathangani
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் (02) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இன்று(02) பிற்பகல் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கலந்துரையாடலில் பணிப்புறக்கணிப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இடைக்கால வைத்திய சேவைகள் கூட்டு முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
30 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 30 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்றும் (01) வைத்தியசாலை நடவடிக்கைகள் முடங்கியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்றைய தினம் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்காக முப்படையினர் களமிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்