ரணிலுடன் தனிப்பட்ட சந்திப்பிற்கு தயாராகும் மொட்டுக் கட்சி
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கான கோரிக்கை ஒன்றை சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிபர் செயலகத்தில் நேற்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் நேற்றைய அதிபருடனான சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள்
இதன்போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான மகிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அதிபர் தேர்தல்
சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அதிபர் தேர்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிபர் வேட்பாளர் தொடர்பில் தமது கட்சி இதுவரையில் தீர்மானம் எடுக்காத நிலையில், அதிபருடன் தனிப்பட்ட கலந்துரையாடல் ஒன்றின் மூலம் இந்த விடயம் தொடர்பில் ஆழமாக கலந்துரையாட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |