சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு விசேட பாதுகாப்பு!
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு மருதானை காவல்துறையினர் விசேட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால மருதானை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
பலத்த பாதுகாப்பு
இதனையடுத்து கட்சியின் தலைமையகத்திற்கு இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மருதானை காவல்துறை நிலைய வாயில்கள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுடன் அங்கு வந்த பதில் பொதுச்செயலாளர் இந்த முறைப்பாட்டினை வழங்கியுள்ளார்.
,இந்நிலையில், ஆரம்பகட்ட விசாரணைகள் முடியும் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |