தமிழினத்திற்கான நீதி கோரும் போராட்டம்! பெர்லினில் பெரும் வெற்றி
கடந்த 73 வருடங்களாக ஸ்ரீலங்கா பெளத்த பேரினவாத அரசினால் கட்டமைப்புசார் இனவழிப்பிற்கு உள்ளாகியுள்ள ஈழத் தமிழினத்திற்கான சுயாதீனமான நீதி விசாரணையை முன்வைத்து இன்று" பெர்லினில்" இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டமானது பெரும் வெற்றியீட்டியுள்ளது. "கொரோனா" நோய்க்கு மத்தியிலும் 350 - 400 பேருக்கு மேற்பட்ட மக்கள் அப்போராட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.
இதன்மூலம் விடுதலைப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டது என்பதை தெளிவாக பார்க்க முடிந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
எமது தேசியம் கருதி எமது மக்கள் இன்று "களத்திலும்,புலத்திலும்"தமது தாயக விடுதலைக்கான பயணத்தில் எவ்வேளையிலும் எந்த இடர்வரினும் தமது பங்களிப்பை செய்வார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது.
இந்த கவனயீர்ப்புப் போராட்ட ஒழுங்குகளை ஜேர்மன் ஈழத்தமிழர் மக்களவை, தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.