வகுப்பிற்கு சென்ற பத்து வயது மாணவியை சீரழித்த காமுகர்கள்
வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த பத்து வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த நால்வர் கொலை மிட்டலும் விடுத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (10) வெலிகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துஷ்பிரயோகம்,கொலைமிரட்டல்
பாதிக்கப்பட்ட மாணவியை துஷ்பிரயோகம் செய்ததுடன், சந்தேக நபர்கள் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி தனது பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயங்கள் குறித்து தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து, தாய் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபர்கள் கைது
இருபது வயதுடைய நான்கு சந்தேக நபர்களும் புதன்கிழமை (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
துஷ்பிரயோகத்துக்கு ஆளான மாணவி, பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
