சட்டத்துறை மாணவன் தாக்கப்பட்ட விவகாரம்! உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள்
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
Sarath Weerasekara
Ajith Rohana
By Vasanth
பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் வைத்து சட்ட துறை மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவர் பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
மிகார குணரத்ன என்ற சட்ட துறை மாணவனை நேற்று பேலியகொட பொலிஸ் அதிகாரிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸிற்கு அழைத்து வந்த சந்தேக நபரை சந்திப்பதற்காக அவர் பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதுடன் இதன்போது சுமார் 10 பொலிஸ் அதிகாரிகள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகன் என தெரிவிக்கப்படுகின்றது.