யாழ்ப்பாண வைத்தியசாலை ஒன்றில் மாணவனுக்கு மறுக்கப்பட்ட சிகிச்சை : வெளிவந்த தகவல்
யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காமையும் வைத்தியர் கடமையில் இல்லாமையும் தொடர்பான செய்தியை அடுத்து இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் விளக்கம் கோரியது. அதன் பிரதியை யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் அனுப்பியிருந்தது.
அதன் பிரகாரம் இம்முறைப்பாட்டுக்கு தமது அறிக்கையை இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் தமது விளக்கங்களை இன்று(30) சமர்ப்பித்துள்ளனர்.
பொறுப்பு வைத்திய அதிகாரியின் பதில்
இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி தமது அறிக்கையில், தாம் உணவு இடைவேளைக்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றது என்றும் தமது அலுவலத்துக்கு நிரந்தர சாரதி இல்லாமையால் தமது நோயாளர் காவு வண்டியினை தற்காலிகமாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியுடன் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தமது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர் இதுவரையும் நியமனம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிக்கை
யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது அறிக்கையில், இனிவரும் காலங்களில் வைத்தியர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், 28.03.2026 ஆம் திகதி முதல் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர் காவுவண்டி ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இவ் வைத்தியசாலைக்கு தாதிய உத்தியோகத்தருக்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி இதுவரை இல்லாத காரணத்தால் முகாமைத்துவ ஆளணி பிரிவுக்கு இவ்வைத்தியசாலைக்கு தாதிய உத்தியோகத்தர் ஆளணியை உருவாக்குவதற்கான கோரிக்கையை தாம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 9 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்