பாடசாலையில் விளையாடிக்கொண்டிருந்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Police
Sri Lankan Schools
By Sumithiran
பென்தோட்டபகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் மதிய உணவு இடைவேளையின் போது விளையாடிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஆரம்ப பிரிவைச் சேர்ந்த இனுரா எவ்மித் என்ற ஏழு வயது மாணவராவார். இந்த மாணவர் பெந்தோட்டை, தவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்றும் காவல்தறையினர் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை இடைவேளையின்போது விளையாட்டு
இன்று (16)பள்ளி விடுமுறை தொடங்கிய பின்னர் இந்த மாணவர் பாடசாலைக்கு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாடசாலை இடைவேளை விடுமுறையின் போது விளையாடிக் கொண்டிருந்த இந்த மாணவர் திடீரென நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்