இரண்டு மாதங்களாக மாயமான மாணவி :பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
Sri Lanka Police
Missing Persons
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Sumithiran
கடந்த டிசம்பர் மாதம் 06 ஆம் திகதியிலிருந்து மாணவி ஒருவரை காணவில்லை என காவல்துறையிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை - கந்தேநுவர பிரதேசத்தைச் சேர்ந்த லமங்கெதர தருசி சம்பிகா என்ற பாடசாலை மாணவியே காணாமற் போனவராவார்.
மாணவியின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறையினர்
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கந்தேநுவர காவல்துறையினர் காணாமல்போயுள்ள பாடசாலை மாணவியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
அத்துடன் மாணவி சுமார் 05 அடி உயரம் கொண்டவர் எனவும் அவர் இலக்கம் 85 கந்தேசநுவர அல்வத்தை என்ற முகவரியில் வசிக்கின்றார் எனவும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
காணாமல் போன மாணவி தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத்071 - 8592943 அல்லது 066 – 3060954 தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
2 வாரங்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி