வெள்ளை வானில் மாணவன் கடத்தப்பட்டதால் பரபரப்பு
தரம் 11 கல்வி பயிலும் மாணவன் வெள்ளை வானில் வந்த சிலரால் கடத்தப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது.எனினும் மாணவன் அந்த வானிலிரு்து குதித்து தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிலியந்தலையில் உள்ள ஒரு தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவனே நேற்று மாலை(16) புதன்கிழமை கடத்தப்பட்டவராவார்.
பிரத்தியேக வகுப்பிற்கு சென்றவேளை சம்பவம்
நேற்று மாலை 4.00 மணியளவில் பிரத்தியேக வகுப்பிற்கு துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, கஹத்துடுவ மயானத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த குழுவினரால் துவிச்சகரவண்டியுடன் மாணவன் கடத்தப்பட்டுள்ளார்.
எனினும் இரத்தினபுரி பகுதியில் வானில் இருந்து குதித்து மாணவன் தப்பிச் சென்றுள்ளான்.
கடத்திய நபர்களை கைது செய்ய விசாரணை
இது தொடர்பாக கஹதுடுவ காவல் நிலையத்தில் மாணவன் அளித்த முறைப்பாட்டை அடுத்து மாணவனை கடத்தியதாக கூறப்படும் நபர்களை கைது செய்ய சிறப்பு விசாரணை ஆரம்பித்துள்ளதாக கஹதுடுவ காவல் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

