கிளப் வசந்தவின் மரணத்தின் பின் வந்த அச்சுறுத்தல் : வெளியாகியுள்ள புதிய தகவல்
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்தவின் சடலம் வைக்கப்பட்ட பொரளை மலர்சாலைக்கு இரு சந்தர்ப்பங்களில் வந்த தொலைபேசி அச்சுறுத்தல் அழைப்புகள் தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்தவகையில், அச்சுறுத்தல் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்ட குறித்த தொலைபேசியின் சிம் கார்ட் ஒரு மாணவியுடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அந்தவகையில், குறித்த மாணவி மாத்தறை (Matara) பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அச்சுறுத்தல் அழைப்புகள்
அதனடிப்படையில், குறித்த மாணவி பொரளை (Borella) பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த தொலைபேசியானது அச்சுறுத்தல் அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அழைப்பு விடுத்தது யார் என்பது இதுவரை தெரியவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |