கண்டியில் மாணவன் மீது கத்தி குத்து : காவல்துறையினர் விசாரணை
Sri Lanka Police
Kandy
Sri Lanka Police Investigation
By Shalini Balachandran
கண்டியில் (Kandy) 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கத்திகுத்துக்கு இலக்காகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது கண்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி, கத்திக்குத்து சம்பவத்திற்கு இலக்கான மாணவர் கண்டி பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தகராறுக்கான காரணம்
அத்தோடு, தகராறுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
