யாழில் உயர்தர பரீட்சைக்கு சென்ற மாணவனுக்கு பாம்புக் கடி
உயர்தர பரீட்சை எழுத சென்ற மாணவன் ஒருவன் பாம்புக் கடிக்கு இலக்காகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (21.11.2025) யாழ்ப்பாணம் (Jaffna) - பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, பரீட்சை எழுத துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் ஒருவன் துவிச்சக்கர வண்டியை நிறுத்துவதற்கு நிறுத்தும் இடத்திற்கு சென்றபோது அவ் இடத்தில் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.
முழுமையான மருத்துவ கண்காணிப்பு
பாம்பு கடிக்கு இலக்காகிய மாணவனை உடனடியாக வடமராட்சி வலயக்கல்வி மற்றும் பொறுப்பான அதிகாரிகள் இணைந்து நோயாளி காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் தற்போது குறித்த மாணவனை ஹாட்லிக் கல்லூரியில் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும் நோயாளி காவு வண்டி, வைத்தியர்கள் போன்றவர்களின் முழுமையான மருத்துவ கண்காணிப்புடனே குறித்த மாணவன் பரீட்சை எழுத அனுமதிக்கபட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
2 நாட்கள் முன்