சக மாணவனின் பிறந்தநாள் நிகழ்வுக்கு பாடசாலைக்கு பியருடன் வந்த மாணவன் -அதிபர் எடுத்த உடனடி நடவடிக்கை
பிறந்தநாள் நிகழ்வுக்கு பியர்
ஹலவத்த பிரதான பாடசாலை மாணவன் தனது வகுப்பில் பயிலும் மாணவனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக வீட்டில் இருந்து திருடப்பட்ட 20000 ரூபாவை பயன்படுத்தி பிறந்தநாள் விழாவை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவன் 10ம் வகுப்பு படித்து வருவதாகவும், மாணவியின் பிறந்தநாளுக்கு வீட்டில் இருந்து இரகசியமாக கொண்டு வந்த இருபதாயிரத்தை பயன்படுத்தி பியர் கூட வாங்கி வந்து பிறந்தநாள் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது.
வகுப்பறையில் கொண்டாட்டம்
எனினும் குறித்த பாடசாலையில் பிறந்தநாள் விழா நடைபெறுவதாக ஆசிரியர்கள் அதிபரிடம் தெரிவித்ததையடுத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் விருந்து நடைபெற்ற வகுப்பறைக்கு வந்து பார்வையிட்டனர்.
குறித்த மாணவன் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட 20000 ரூபா பணத்தை பல்வேறு வகையான இனிப்புகள் மற்றும் பியர் கான்கள் வாங்க பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிபர் எடுத்த நடவடிக்கை
உடனடியாக பிறந்தநாள் விழாவை நிறுத்திய அதிபர், சம்பந்தப்பட்ட மாணவனையும், அதில் ஈடுபட்டிருந்த மற்ற மாணவர்களையும் அதிபர் அலுவலகத்துக்கு வரவழைத்து, அவர்களது பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து விசாரணையை மேற்கொண்டார்.