சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த அவலம்
Sri Lanka Police
Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Laksi
பலாங்கொடை - மாரதென்ன (Balangoda) பகுதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதச் சென்ற மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துயரச் சம்பவம் இன்று(6) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2023ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளன.
பிரேத பரிசோதனை
இந்தநிலையில், பரீட்சை எழுதச் சென்ற குறித்த மாணவன் அப்பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுவிட்டு திரும்பிய நிலையில் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை மாரதென்ன பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 5 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி