வவுனியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகிய மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்துக்கு முன்பாக அங்கு நின்ற மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு குளவி கொட்டியதில் பலர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக அப்பகுதியில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு குளவி கொட்டிய நிலையில் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இதன் காரணமாக தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக நின்ற மாணவர்கள் மற்றும் அவர்களை கற்றறல் நடவடிக்கைகளுக்காக அழைத்து வந்த பெற்றோருக்கும் குளவி கடுமையாக கொட்டியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இதன் காரணமாகவே பலர் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலைமை தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உட்பட்ட இது தொடர்பிலான அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மாணவர்களைப் பெற்றோரை மாத்திரமின்றி வீதியால் செல்வோரையும் பாதுகாக்குமாறு பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |