மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் நூறு பேர் பலி
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பாரம்பரிய தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் கேமரூன் எல்லைக்கு அருகிலுள்ள ஜாம்போயே (Zamboye) கிராமத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை உள்ளிட்ட மேலதிக விவரங்கள் இன்னும் சேகரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் சட்டதரணி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசு தரப்பு வழங்கறிஞரின் முக்கிய அறிவிப்பு
பலர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதுடன், சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சுரங்கங்களில் பணியாற்றி தங்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயன்ற இளம் ஆண்களும் பெண்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, எல்லையைத் தாண்டி வரும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கேமரூன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்த விபத்துக்கான காரணம் மற்றும் சுரங்கத்தை நடத்தி வந்தவர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசுத் தரப்பு சட்டதரணி தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் சிறிய அளவிலான தங்கம் மற்றும் கனிம அகழ்வுத் தொழில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகின்றது.
எனினும், போதிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாததால் இதுபோன்ற சுரங்க விபத்துகள் ஏற்பட்டு பெருமளவிலான உயிரிழப்புகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |