ஈரானுக்கு உதவும் நாட்டுகளுக்கு கடும் தண்டனை - ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரானுக்கு உதவும் அல்லது அதனுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாட்டுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நவம்பர் மாதத் தேர்தல்கள் மிக வேகமாக நெருங்கி வரும் நிலையில், இந்தப் போர் தொடர்பில் ட்ரம்ப் உள்நாட்டிலும் அரசியல் ரீதியான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்.
குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில் தெரிவித்துள்ளார்.
பாரிய பொருளாதார விளைவு
ஈரானுக்கு எந்த வகையிலாவது உயிர்நாடியாகச் செயல்படுவதற்குத் தமது நிதி நிறுவனங்கள், வணிகங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசாங்க நிறுவனங்களை அனுமதிக்கும் எந்தவொரு நாடும் பாரிய பொருளாதார விளைவுகளைச் சந்திக்கும் என்பதையும் நான் அறிவிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நாடுகள் என்ன மாதிரியான தண்டனையை எதிர்கொள்ளும் என்பதை அவர் குறிப்பிடவில்லை, மேலும் ஈரான் தவிர வேறு எந்த நாடும் அவரால் பெயரிடப்படவில்லை.
ஈரானின் மீது உலகம் இதுவரை கண்டிராத வகையில் பொருளாதாரத் தனிமைப்படுத்தலை அமெரிக்கா விதிக்கும் என திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |