திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள்..!
Sri Lanka Upcountry People
Tamils
Nuwara Eliya
Sri Lankan Schools
By Dharu
நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ தமிழ் வித்தியாலய மாணவர்கள் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 31மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் தொடர்ந்து பகலுணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட வேளை மாணவர்களுக்கு மயக்கநிலை, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன.
31க்கும் அதிகமான மாணவர்கள்
உணவருந்தியவர்களில் சுமார் 31க்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நானுஓயா காவல்துறையினர் தெரிவித்தனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி