திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்..!
Trincomalee
Eastern University of Sri Lanka
By pavan
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களில் 40க்கும் அதிகமானோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் காய்ச்சல், வயிற்றோட்டம் தலைச்சுற்று போன்ற நோய் அறிகுறிகள் காரணமாகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பெண் மாணவர்கள்
அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் பெண் மாணவர்கள் அதிகமாக இருப்பதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
குறித்த மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமையாக இருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி