சத்தமில்லாமல் சீனா செய்த காரியம் : வலிமை பெறும் பாகிஸ்தான் கடற்படை
பாகிஸ்தானுக்கு(pakistan) 5 பில்லியன் டொலா்கள்மதிப்பில் 8 ஹங்கோா் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை அளிக்க சீனா(china) ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இரண்டாவது கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் ஒப்படைக்கப்பட்ட அந்தக் கப்பல் அதிநவீன ஆயுதங்கள், சென்சாா்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. மேலும் நீா்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் டாா்பீடோ குண்டுகள், கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை அழிக்கும் திறன் கொண்டுள்ளது.
மேலும் ஒரு நீா்மூழக்கிக் கப்பலை சீனா ஒப்படைத்துள்ளது
பாகிஸ்தான் கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில், அந்நாட்டுக்குக் கடந்த 4 ஆண்டுகளில் நவீன கடற்படை போா்க் கப்பல்களை சீனா வழங்கியுள்ளது.தற்போது கூடுதலாக மேலும் ஒரு நீா்மூழக்கிக் கப்பலை சீனா ஒப்படைத்துள்ளது.
8 ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல்கள்
இதுதொடா்பாக பாகிஸ்தான் கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘8 ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல்களில் 4 கப்பல்கள் சீனாவிலும், தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் அடிப்படையில் 4 கப்பல்கள் பாகிஸ்தானிலும் கட்டப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்