தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் இப்படியுமொரு தாய் - - சுற்றிவளைத்து பிடித்த பொலிஸ்
கொரோனா தொற்று அதிகரித்து செல்வதை அடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.
இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தில் பலரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்த நிலையில் வீட்டுக்கு முன்பாக உள்ள மரத்தின் கீழ் தனது எட்டு மாத குழந்தையை வைத்து விட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட தாய் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹொரணை - கட்டுகஹதெனிய பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு சென்ற போது, சூதாட்டத்தில் ஈடுபட்ட தாயும் ஏனையவர்களும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, அந்தப் பெண் தனது 8 மாத குழந்தையை அயல் வீட்டில் விட்டு விட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
எனினும், பொலிஸார் அந்த இடத்திற்கு சென்ற போது குழந்தை வீட்டின் அருகே உள்ள மரத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.