வெளிநாடொன்றில் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகி பலியான 33 குழந்தைகள்
சூடானில் ஆயுத குழுவினர் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாடசாலை மற்றும் மருத்துவமனை மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 33 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் பலியாகியுள்ளனர்.
ஆயுதக்குழுவினர்
சூடானில் அந்நாட்டு இராணுவத்திற்கும் மற்றும் ரேபிட் சப்போர்ட் போர்சஸ் (ஆர்எஸ்எப்) எனப்படும் ஆயுதமேந்திய குழுவினருக்கும் சமீப காலமாக மோதல் போக்கு இருந்து வருகின்றது.
இந்தநிலையில் கோர்டோபான் மாகாணத்தில் உளு்ள கலோகி நகரில் உள்ள ஒரு சிறுவர்கள் பாடசாலை மற்றும் மருத்துவமனை மீது ஆயுத குழுவான ஆர்எஸ்எப் ட்ரோன் ஏவியுள்ளது.

குறித்த தாக்குதலுக்கு மேற்படி ஆயுதக்குழுவினர் பொறுப்பேற்கவில்லை என சூடான் மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு குறித்த அமைப்பு இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |