தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 38 பேர் பரிதாப பலி -சூடானில் சோகம்
death
people
sudan
mine-collapses
By Sumithiran
சூடான் நாட்டில் தங்க சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டின் தலைநகரான கார்டோமின் மேற்குப் பகுதியில் தங்க சுரங்கம் அமைந்துள்ளது. இந்த தங்க சுரங்கம் மூடப்பட்டு செயற்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், மூடப்பட்டிருந்த தங்க சுரங்கத்திற்கு சென்ற சிலர் தங்கம் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விபத்தில் சிக்கியது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் 38 பேரின் உடல்களை மீட்டனர். காயமடைந்த பலரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி