இரண்டு மாதங்களுக்குப் பிறகு அமெரிக்க இராணுவத் தளம் ஈரான் திடீர் தாக்குதல்
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியதை ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ சொத்துக்களை குறிவைத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் ஈரான் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.
இதன்படி இரண்டு ஈரானிய ஆளில்லா விமானங்களை அமெரிக்கப் படைகள் இடைமறித்ததாகவும், இராணுவ ரேடார் அமைப்பை அழித்துவிட்டதாக ஈரான் கூறிய கூற்றையும் அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) மறுத்துள்ளது.
அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்
இதன்படி சிரிக் நகரில் உள்ள தகவல் தொடர்பு கோபுரம் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) விவரித்துள்ளதாக, அரை அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"சில மணிநேரங்களுக்கு முன்பு, சிரிக் நகரில் உள்ள ஒரு தகவல் தொடர்பு கோபுரத்தின் மீது எதிரி நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஐ.ஆர்.ஜி.சி-யின் விண்வெளிப் படைகள், பஹ்ரைனில் உள்ள ஆக்கிரமிப்பு அமெரிக்க இராணுவத்தின் முன் எச்சரிக்கை ரேடாரைக் குறிவைத்து அழித்தன," என்று ஐ.ஆர்.ஜி.சி கூறியதுடன், "இது அமெரிக்காவுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை" என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |