வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு: ஒரே பேச்சுவார்த்தை மேசையில் ட்ரம்ப் - ஷி ஜின்பிங் - புடின்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டையொட்டி, முதன்முறையாக முத்தரப்பு சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நடைபெறவுள்ளது.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான 'நியூ ஸ்டார்ட்' (New START) அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி மாதத்துடன் காலாவதியானது.
அணு ஆயுதக் கட்டுப்பாட்டு
இதனையடுத்து, உருவாக்கப்படவுள்ள புதிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் சீனாவையும் இணைக்க டரம்ப் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பில் தன்னை இணைத்துக்கொள்வது நியாயமற்றது என சீனா கருதுவதால், இந்தச் சந்திப்பில் உடனடியாகப் புதிய ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் ஈரான் போர் காரணமாக உலகின் முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
னாவின் மசகு எண்ணெய் இறக்குமதியில் சுமார் மூன்றில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே நடைபெறுவதால், எண்ணெய் விலை உயர்வு சீனாவையும் உலகப் பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது.
எனவே, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்தும் இந்தச் சந்திப்பில் முக்கியமாகப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |