பாடசாலை விடுமுறையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!.. சற்று முன்னர் வெளிவந்த புதிய அறிவிப்பு
Education
School
Leave
SriLanka
Education Minister
School Holidays
By Chanakyan
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 2022ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி வரை விடுமுறையை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வியமைச்சினால் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையிலேயே தற்போது குறித்த தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2022ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்