தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
People
Gold
SriLanka
By Chanakyan
உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக சர்வதேச சந்தை நிலவரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி தங்கத்தின் விலை 1800 அமெரிக்க டொலரை எட்டியுள்ளதென தங்க இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஒரு அவுன்ஸ் விலை 30 டொலர் வரையில் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை 23.30 டொலர் அதிகரித்துள்ளது.
அதற்கமைய வார இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1816.80 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளதாக உலக சந்தை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு தரவுகள் உயர்ந்த போக்கைக் காட்டும் நிலையிலும் தங்கத்தின் விலை உயர்வடைநது வருவதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.