சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு!
சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் திடீரென வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட அராலி மேற்கு பகுதியைச் சேர்ந்த தியாகராசா ஜெயரஞ்சன் (வயது-32) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தர் சில நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டு குணமடைத்திருந்தார்.
நேற்றைய தினம் திடீரென ஏற்பட்ட சாதாரண சுகயீனம் காரணமாக வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் சிகிச்சை பயனளிக்காது குறித்த நோயாளி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரமோகன் விசாரணைகளை மேற்கெள்ளவுள்ளார்.