சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததை அடுத்து, நேற்று (21.08.2026) அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்று, அதன் மூலம் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சுகீஸ்வர பண்டார ஜூன் 18 அன்று கைது செய்யப்பட்டார்.
சுகீஸ்வர பண்டார
இதற்கிடையில், ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக, சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் ஊழல் தடுப்புக் குழு, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (CCIB) முறைப்பாடு அளித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில், சுகீஸ்வர பண்டார 2022இல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியதும், அதே காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் இயக்குனர் பதவியையும் வகித்ததும் தெரியவந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |