ஆப்கானில் பாரிய தற்கொலைத் தாக்குதல் -50 பேர் உடல் சிதறிப் பலி
ஆப்கானிஸ்தான் வடபகுதி நகரான குண்டூஸில் பள்ளிவாசலொன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக பி பி சி தெரிவித்துள்ளது.
அத்துடன் 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 300 பேர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றவேளை தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த பள்ளிவாசலில் இன்றைய ஜும்ஆ தொழுகையில் கலந்துகொண்டவர்களை இலக்கு வைத்தே இந்த தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிறுபான்மை ஷியா பிரிவினரின் பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ள இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சிதறிக் காணப்படுவதாக கூறப்படுகின்றது. இந்த தற்கொலை தாக்குதல் சம்பவத்திற்கு எவரும் உரிமை கோரவில்லை.
Meanwhile deadly blast reported in a Shi'ite mosque in KhanAbad, #Kunduz some minutes ago. Very little doubt that it's ISKP. #Afghanistan
— Hemat Mohammad همت محمد (@Mohammadwardak6) October 8, 2021
pic.twitter.com/AavyoPBUK0