அதிகரிக்கும் தமிழரசுக்கட்சி மோதல் - முடிவில் எந்த மாற்றம் இல்லை...! சுமந்திரன் அறிவிப்பு
சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதானிகள் குழு ஒன்று அண்மையில் கூடி இந்த முடிவை உறுதி செய்ததாக அக்கட்சியின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் (M. A. Sumandran) தமது (x) எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தே தற்போது ஆராயப்படுகிறது என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.
அரசியல் ரீதியாக முக்கியத்துவம்
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான முக்கிய மந்திராலோசனையொன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் (S.Sridharan) தலைமையில் மூத்த போராளி யோகன் பாதரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
This news is misleading. We actually endorsed the decision taken earlier to support @sajithpremadasa and have taken steps to continue discussions with him regarding implementation. We will not talk to any other candidate. There is NO re-evaluation! https://t.co/soCqy7nf54
— M A Sumanthiran (@MASumanthiran) September 11, 2024
தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான ஆதரவை அதிகரிக்கவும் இணக்கம் காணப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மூத்த போராளி காக்கா அண்ணன், ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்துவதன் தேவையையும் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கும் தேவையையும் வலியறுத்தியதுடன், தனது கருத்துக்களைத் தெரிவித்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பில் சுமந்திரன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் ஆகியோர் சஜித் பிரேமதாசாவை (Sajith Premadasa) ஆதரித்துள்ள நிலையில் இக் கலந்துரையாடல் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விடயம் எனக் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |