தலைமை யாராக இருந்தாலும் தலைவர் நிலைப்பாட்டில் காய் நகர்த்தும் சுமந்திரன்
தமிழரசுக் கட்சியின் தலைமை யாராக இருந்தாலும் கட்சியை தாமே வழிநடத்தி வருகின்றேன் என்ற மனநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நீண்டகாலமாக செயற்பட்டு வருவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் (Neru Gunaratnam) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, 2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) வெற்றியடைந்ததன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் எ.ஏ.சுமந்திரன் வொசிங்டனை மையப்படுத்தி பல விடயங்களை முன்னகர்த்திச் சென்றுள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, 2019ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksa) வெற்றியீட்டிய பொழுது அவரின் வெற்றியில் அமெரிக்காவின் வகிபாகம் பெரிதளவில் இருக்கவில்லை என்றும் அரசியல் ஆய்வாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தொடர்ந்தும் தெரிவிக்கையில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |