மோடியின் வருகைக்கு காத்திருக்கும் சுமந்திரன் : ஆராயப்படவுள்ள விடயங்கள்
நீண்டகாலம் முன்வைத்து வரப்படும் தமிழ் மக்களின் கோரிக்கை குறித்து இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடியிடம் (Narendra Modi) கலந்துரையாடுவோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்திலே “தமிழரசுத் தொடர்பகம்” இன்று (04) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு நாங்கள் நேரம் கேட்டுள்ளோம்.
அவர் குறுகிய கால இடைவெளிக்குள் வந்து செல்கின்ற காரணத்தினால் அவரிடம் கலந்துரையாடுவதற்கான நேரம் குறித்து உறுதி செய்யப்படவில்லை.
அவ்வாறு உரையாடுவதற்கு நேரம் கிடைத்தால் நாங்கள் நீண்டகாலம் முன்வைத்து வருகின்ற கோரிக்கைகள் குறித்து இந்திய பிரதமரிடம் கலந்துரையாடுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசியலுக்கு அப்பால் மக்களின் சேவைகளை முன்னெடுப்பதற்கு விரைவில் தமிழரசு
தொடர்பகம் திறக்கப்படவுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்