தமிழரசு கட்சியின் தலைமை பதவியை சிறீதரனிடம் இருந்து திட்டமிட்டு பறித்த சுமந்திரன்
தமிழரசுக் கட்சிக்கு தலைவராவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு (S. Shritharan) இருந்த சிறந்த வாய்ப்பை திட்டமிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) பறித்தாக பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் பாலா மாஸ்ரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு காலத்தில் கட்சியின் தலைவராவதற்கு சிறீதரனுக்கு பொதுச்சபையில் இருந்த வாயப்பை படிப்படியாக சுமந்திரன் அனுகினார்.
அந்த அனுகுமுறை ஊடாக சிறீதரனுக்கு இருந்த ஆதரவை குறைத்து குறைத்து மத்தியக்குழுவில் தனக்கான பெருபான்மை ஆதரவை சுமந்திரன் தன்வசப்படுத்தினார்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழரசுக் கட்சியில் தற்போதைய நிலை, அடுத்த கட்டம், கட்சிக்குள்ளான உள்ளக மோதல்கள், பட்டலந்த முகாம் விவகாரம், தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி மற்றுமு் எதிர்கால ஆட்சி குறித்து அவர் தெரிவித்த விரவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்