சம்பந்தன் சுமந்திரன் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை? விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்க பரிந்துரை
அரசியலமைப்பை மீறியதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சுமந்திரன் உட்பட 21 பேருக்கு தண்டனை வழங்கும் வகையில் நாடாளுமன்றுக்கு பரிந்துரைகளை முன்வைக்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழுவே மேற்கண்ட பரிந்துரையை முன்வைத்துள்ளது. கடந்த நல்லாட்சி அரசில் செயற்பட்ட ஊழல் தடுப்புக்குழு மற்றும் ஊழல் தடுப்பு செயலகம் ஆகியவற்றை நிறுவுவதில் இவர்கள் அரசியலமைப்பை மீறியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி அரசியலமைப்பை மீறியவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.
மஙகளசமரவீர, பாட்டாலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், சரத் பொன்சேகா, ஆர்.சம்பந்தன், சுமந்திரன்,அநுரகுமார திஸநாயக்க, ஜே.சி வெலியமுன, மலிக்சமரவிக்கிரம,கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண,முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரே அவர்களாவர் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.