தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைவது சாத்தியமில்லை: சுமந்திரன் உறுதி
தனி நாடு இல்லாமல் தங்களை ஆள கூடிய சுயாட்சி முறைக்கு எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்றாக இணைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் தனது உத்தியோகர்ப்பூர்வ யூடியுப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நேர்காணல் காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அணுகுமுறைகளில் காணப்படும் வித்தியாசம், அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்கும் ஒருதரப்பு இல்லை எனில் அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிக்காது தாங்கள் தனியாக பயணிக்கும் ஒரு தரப்பு மற்றும் முரண்டு பிடித்து கொண்டு முழுமையான எதிர்ப்பு அரசியல் என ஒரு தரப்பு உள்ளது.
பலமான வித்தியாசம்
இந்தநிலையில், அணுகுமுறைகளில் பலமான வித்தியாசம் இருக்கின்ற போது அதை மக்களுக்கு கொண்டு செல்லும் போது ஒருவருக்கு ஒருவர் குற்றம் சுமத்திதான் மக்களுக்கு இடையில் கொண்டு செல்கின்றோம்.
இது என்னுடைய பார்வையில் மிகவும் தவிர்க்கப்பட கூடிய விடயமா இல்லையா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி.
காரணம், ஒரு ஜனநாயக வழியில் ஜனநாயக முறைப்படி மக்களின் உரிமைகளை பெற்று கொள்ளக்கூடியதாக இருந்தால், அந்த ஜனநாயக முறைமையில் தேர்தல் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மக்கள் ஆணை
அதாவது தேர்தலில் மக்கள் ஆணையை வழங்கினால்தான் மக்களின் அணியுடன் இதை நாங்கள் முன்வைக்கின்றோம் என எங்களால் தெரிவிக்க முடியும் இல்லையெனில் அதனை தெரிவிப்பதற்காக உரிமை எங்களிடத்தில் இல்லை.
ஆகவே, ஆயுத போராட்டம் இல்லாத இடத்தில் ஜனநாயக சூழலில் தேர்தலில் வெற்றி பெற்றால்தான் மக்களை நாங்கள் பிரதிநித்துவப்படுத்த முடியும்.
இவ்வாறான சூழ்நிலையில்தான் நாங்கள் இருக்கின்றோம் என்ற அடிப்படையில் ஒன்றாக இருந்தால் கூடுதலான மக்கள் ஆணையை நாங்கள் பெறலாம் என்பது சரி ஆனால் வித்தியாசமான அணுகுமுறைகள் இருக்கின்ற போது இது சத்தியம் இல்லை.
மக்களின் உரிமைகள்தான் முக்கியம் என நினைப்பவர்கள் சேர்ந்து பயணிக்கலாம், அப்படி ஏதாவது ஒரு தரப்பு சேர்ந்து பயணிக்குமாக இருந்தால் அதற்க்கு நான் உடன்படுவேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா
