போரின் போது ஓடி ஒளிந்த சிறீதரன் : கிண்டலடித்த சந்திரசேகரன்
நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது ஓடி ஒளிந்த சி.சிறீதரன் (S. Shritharan) இன்று தன்னை ஒரு பெரிய ஒரு விடுதலைப் போராளி என்று கூறுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் (Ramalingam Chandrasekar) சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) - பூநகரி (Pooneryn) பகுதியில் நேற்று (20.04.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் ஒன்று சேர வேண்டும் என கோரும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் (M. A. Sumanthiran) முதலில் ஒன்று சேர வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், பெரிய போராட்டங்களில் எங்களுக்கு அடி வாங்க தெரியும். சிறீதரன் போல ஒழிய மாட்டோம்.
அனைவருக்கும் தெரியும் இங்கே பெரிய ஒரு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அது அனைத்து தமிழ் மக்களும் அணி திரண்டு இருந்த காலம்.
அங்கே அப்போது ஓடி ஒளிந்து மறைந்து இருந்த நபர் இப்போது தான் பெரிய ஒரு விடுதலைப் போராளி என குறிப்பிடுகின்றார்.
ஒரே கட்சியில் உள்ள சிறீதரன் ஐயா நீங்களும் சுமந்திரனும் முதலில் ஒன்று சேருங்கள். தமிழ் மக்கள் ஒன்று சேர்வதை பற்றி அடுத்த கட்டம் பார்த்துக் கொள்ளலாம்.’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இதுவரையான காலமும் மீனவர்களைப் பயன்படுத்தி இலாபம் ஈட்டிய அரசியல் தரப்பினர் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
